அரசு சிறப்பு பஸ் வசதி


அரசு சிறப்பு பஸ் வசதி
x
தினத்தந்தி 23 Jun 2023 7:00 PM GMT (Updated: 24 Jun 2023 11:54 AM GMT)

அரசு சிறப்பு பஸ் வசதி கொண்டுவரப்பட்டுளது

தேனி

மதுரையில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் போடிக்கு காலை 10.30 மணிக்கு வந்து அடைகிறது. இதேபோல் போடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் ெரயில் மதுரைக்கு இரவு 7.50 மணிக்கு சென்று அடைகிறது. இதேபோல் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 தினங்கள் போடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு போடிக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் போடிக்கு காலை 9.35 மணிக்கு வந்து சேருகிறது. போடி ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு செல்வதற்கு பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் போடி ரெயில்நிலையத்தில் இருந்து பஸ்நிலையத்துக்கு தினமும் காலை 10.10 மணிக்கும், சென்னை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் பயணிகளின் வசதிக்காக காலை 9.20 மணிக்கும் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு போடி ரெயில்நிலையத்தில் இருந்து பஸ்நிலையத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story