மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த அரசு மானியம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த அரசு மானியம் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல்
பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் ஆதிதிராவிடருக்கு 60 சதவீத மானியமாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு திண்டுக்கல் நேருஜிநகரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று, ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story