அரசு டவுன் பஸ் டயர் வெடித்து 2 பெண்கள் காயம்


அரசு டவுன் பஸ் டயர் வெடித்து 2 பெண்கள் காயம்
x

கீரமங்கலத்தில் அரசு டவுன் பஸ் டயர் வெடித்து 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

கீரமங்கலம் வழியாக பேராவூரணியில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் டவுன் பஸ் நேற்று மாலை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பின்பக்க டயர் ஒன்று வெடித்தது. இதில், டயருக்கு மேலே உள்ள பலகை உடைந்து பஸ்சில் பயணம் செய்த 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த பெண்களை பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story