அரசு போக்குவரத்து கழக பணிமனையில்உடலில் துணியை போர்த்தி டிரைவர் நூதன போராட்டம்
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உடலில் துணியை போர்த்தி டிரைவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேனி
பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர், பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தார். அப்போது அவர் தனது உடலில் காக்கி துணியை போர்த்திக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, "அரசு போக்குவரத்து கழகத்தில் சீருடையை தைப்பதற்கு கடந்த 12 ஆண்டுகளாக அரசு தையல் கூலி வழங்கவில்லை. ஒரு செட் சீருடையை தைக்க ரூ.450 செலவாகிறது. தையல் கூலி கேட்டு விண்ணப்பித்தும் பயனில்லை. இதனால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டேன்" என்றார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story