"நாடாளுமன்றத்தை முடக்குவது தான் அரசின் நோக்கம்"- ப.சிதம்பரம்
நாடாளுமன்றத்தை நடத்துவது அரசின் நோக்கமாகத் தெரியவில்லை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற மக்களவையில் நடந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது;
"நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பாதுகாப்புக் குளறுபடி பற்றி பிரதம மந்திரி அல்லது உள்துறை அமைச்சர் அறிக்கை தர வேண்டுமெனக் கோருவது குற்றமா?
அந்தக் கோரிக்கையை வலியுறுத்திய உறுப்பினர்கள் அவையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது தான் வியப்பை அளிக்கிறது.
நாடாளுமன்றத்தை நடத்துவது அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தை முடக்குவது, ஒத்தி வைப்பது தான் அரசின் நோக்கமாகத் தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story