தொட்டபெட்டா சிகரத்தை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி


தொட்டபெட்டா சிகரத்தை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
x

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

நீலகிரி,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ந் தேதி சென்றார். அவர் நேற்று தோடர் இன மக்கள் வசிக்கும் முத்தநாடு கிராமத்திற்கு தனது மனைவியுடன் சென்றார். கவர்னர் தோடர்களுடன் நடனமாடி அவர்களது குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்தார்.

இந்த நிலையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தை பார்வையிட்டார். அங்குள்ள காட்சி கோபுரத்தின் மீது ஏறி தொலைநோக்கி மூலம் ஊட்டி அழகை கண்டு ரசித்தார். இதன் பின்னர் அருகில் உள்ள பாறை பகுதிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தார்.

பின்னர் ஊட்டியின் முதல் கல் கட்டிடமான "ஸ்டோன் ஹவுஸ்" சென்று பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரம் வரை அங்கிருந்த கவர்னர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் பறவைகளின் மாதிரி உருவங்கள், பழங்குடி இன மக்களின் வாழ்க்கை முறை குறித்த புகைப்பட தொகுப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் ஊட்டி ராஜ் பவன் மாளிகைக்கு திரும்பினார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.


Next Story