கோவிந்தசாமி அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


கோவிந்தசாமி அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:47 PM GMT)

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண் டிற்கான முதுநிலை படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், கணினி அறிவியல், புவியமைப்பியல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மதிப்பெண் பட்டியல்

எனவே கலந்தாய்வில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம். இளநிலை படிப்பு மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் 2 நகல்கள், மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், சாதி சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல். ஆதார் அட்டை 2 நகல்கள், உரிய சேர்க்கை கட்டணம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். கலந்தாய்வுக்கு காலை 10 மணிக்கு முன்னதாகவே கல்லூரிக்கு மாணவர்கள் வந்து தாங்கள் சார்ந்த துறைக்கு சென்று பெயரை பதிவு செய்யவேண்டும். இந்த தகவலை கல்லூரி நிர்வாகம் சார்பில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story