கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம்


தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறை 3-ம் ஆண்டு மாணவி சுபாஷ்னி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஏன்ஜலினா ரஞ்சிதமணி கலந்துகொண்டு "ஸ்வயம் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட கற்றல் தேசிய திட்டத்தில் இணையவழி பாடங்கள் பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியை கிருஷ்ணவேணி செய்திருந்தார். முடிவில் மாணவி ரேணுகா நன்றி கூறினார்.

மேலும், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியும் இணைந்து கல்லூரி முதல்வர் ஜெயந்தி வழிகாட்டுதலின்படி 2021-22 கல்வி ஆண்டிற்கான ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

முகாமை சிறப்பாக நடத்திய கல்லூரியையும், ரத்ததானம் செய்த மாணவிகளையும் பாராட்டி, திருச்செந்தூர், தலைமை டாக்டர் பொன்ரவி, ரத்த வங்கி டாக்டர் சசிகலா ஆகியோர் கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோரிடம் ரத்ததான தின பாராட்டு சான்றிதழை வழங்கினர்.


Next Story