கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்சமூகநீதி நாள் உறுதிமொழி


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்சமூகநீதி நாள் உறுதிமொழி
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:47 PM GMT)

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அணிகள் எண்.49 மற்றும் எண்.50 சார்பில் "சமூக நீதி நாள்" உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜெயந்தி முன்னிலையில் கல்லூரி மாணவிகள் மானுடத்தின் மீதான பற்றையும், மனிதாபிமானத்தையும் போற்றும் விதமாக சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகியவை கொண்ட சமூகம் அமைத்திடவும், பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என்ற அன்பு நெறியினை கடைப்பிடித்திடவும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பேரவை கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைைம தாங்கினார். மாணவி மவுபிகா கமருன்னிசா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முத்துலட்சுமி கலந்து கொண்டு 'மெய்நிகர் உண்மை மற்றும் பெரிதாக்கப்பட்ட உண்மை' என்ற தலைப்பில் பேசினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் செல்வநாயகி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியை அகஸ்டா மேரிபா செய்து இருந்தார். மாணவி செரின் நன்றி கூறினார்.


Next Story