கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்பயின்றோர் கழக கூட்டம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பயின்றோர் கழக கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பயின்றோர் கழக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை வீ.லெட்சுமி நாராயணி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை உரை நிகழ்த்தினார். கடந்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்விற்கான ஆண்டறிக்கையை கணினி அறிவியல் துறை பேராசிரியை ஸ்ரீஉமாமகேஸ்வரி வாசித்தார். ஏரல் ஒன்றிய முதுநிலை வருவாய் ஆய்வாளர்அ.பிரியாதேவி கலந்து கொண்டு, ' போட்டித்தேர்வுகளும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்' என்ற தலைப்பில் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மாணவியர், தமது கல்லூரி நாட்களில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்த்துறை உதவி பேராசிரியை தி.பிரகாசி மேரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பயின்றோர் கழக தலைவர் ஸ்ரீஉமாமகேஸ்வரி, துணைத்தலைவர் வீ.லெட்சுமி நாராயணி, செயலர் தி.பிரகாசி மேரி, இணைச்செயலர் பா.கவிதா மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.