சேற்றில் சிக்கிய அரசு பஸ்


சேற்றில் சிக்கிய அரசு பஸ்
x

எருமப்பட்டி அருகே சர்வீஸ் ரோட்டில் சென்ற அரசு பஸ் சேற்றில் சிக்கிக்கொண்டது.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு பொட்டிரெட்டிப்பட்டி பொன்னேரி மற்றும் எருமப்பட்டி, கைகாட்டி ஆகிய இடங்களில் திடீரென மழை பெய்தது. இதனால் ஆங்கங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இந்தநிலையில் பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி, கைகாட்டியில் பாலம் கட்டும் வேலை நடைபெறுகிறது. இதனால் எருமப்பட்டி பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக மாற்றுப்பாதையாக சர்வீஸ் ரோடு போடப்பட்டது. இதில் மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் இரு சக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று சர்வீஸ் ரோட்டில் சென்ற அரசு பஸ் ஒன்று சேற்றில் சிக்கி கொண்டது. இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் கடும் சிரமப்பட்டனர். எனவே பாலம் முழுமையாக கட்டி முடிக்கும் வரை சர்வீஸ் ரோடு சரியாக அமைக்க வேண்டும் எனவும், அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story