கோத்தகிரி - பாலக்காடு இடையே இயக்கப்படும்அரசு பஸ் சேவையை ரத்து செய்யக்கூடாது-நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் தீர்மானம்


கோத்தகிரி - பாலக்காடு இடையே இயக்கப்படும்அரசு பஸ் சேவையை ரத்து செய்யக்கூடாது-நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T00:15:16+05:30)

கோத்தகிரி - பாலக்காடு இடையே இயக்கப்படும்அரசு பஸ் சேவையை ரத்து செய்யக்கூடாது-நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் தீர்மானம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, கோடை காலத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் தடுக்க, நகரப் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை பராமரிக்க அதிகாரிகளை வலியுறுத்துவது, கோத்தகிரி அரசு சித்த மருத்துவ பிரிவில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கவும், காலியாக உள்ள சித்த மருத்துவர் பணியிடத்தை நிரப்பவும் அதிகாரிகளுக்கு மனு அளிப்பது, கோத்தகிரி குன்னூர் பஸ் நிறுத்துமிடத்தில் மாலை நேரத்தில் கூட்டநெரிசல் ஏற்படுவதால் ஒழுங்கு படுத்த ஒரு காவலரை நியமிக்க வலியுறுத்துவது, மேலும் கோத்தகிரியில் இருந்து பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்தில் உள்ள பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு மாற்று பஸ்களில் அனுப்பி வைத்து, அந்த பஸ்சை வேறு பகுதிக்கு அனுப்புவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டத்துடன், இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதால் பஸ் சேவையை பாதியில் ரத்து செய்யக் கூடாது என போக்குவரத்து உயர் அதிகாரிகளை வலியுறுத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் நன்றி கூறினார்.


Next Story