வியாசர்பாடி ரெயில்வே பாலத்தில் சிக்கிய அரசு பேருந்து - பயணிகள் பத்திரமாக மீட்பு


வியாசர்பாடி ரெயில்வே பாலத்தில் சிக்கிய அரசு பேருந்து - பயணிகள் பத்திரமாக மீட்பு
x

பேருந்தில் சிக்கிய பயணிகளை கயிறு மற்றும் ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை,

சென்னை பிராட்வே பகுதியில் இருந்து மூலக்கடை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, வியாசர்பாடி ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்றது. அப்போது சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்தால், அந்த பேருந்து பாலத்தில் சிக்கிக் கொண்டது.

பேருந்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால், அதிலிருந்த பயணிகள் வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் சிக்கிய சுமார் 25 பயணிகளை கயிறு மற்றும் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதாகவும், இதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story