கோவில்பட்டி அரசு கல்லூரியில் நம்மஊர் சூப்பர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி அரசு கல்லூரியில் நம்மஊர் சூப்பர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நம்ம ஊரு சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு தூய்மை பாரத இயக்கம், முழு சுகாதாரம், நெகிழி தவிர்ப்பு, மரங்கள் நடுதல், துணிப்பை பயன்படுத்துதல் குறித்து பேசினார்.
தொடர்ந்து மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர் களுக்கு மஞ்சள் பை, முககவசம், கை
உறைகளை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் அதிசயமணி, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சியில் சுகாதார ஊக்குனர்கள் ஜெயசாந்த லட்சுமி, கிருஷ்ண செல்வி, பாலம்மாள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சவுந்தரராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட முதன்மை பயிற்சியாளர் தமிழ்ச்செல்வி செய்திருந்தார்.