அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
x

கிளியனூர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒன்றியக்குழு தலைவர் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியம் கிளியனூர் ஊராட்சியில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது தலைமை தாங்கினார். குத்தாலம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் சுகந்தவள்ளி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் கலந்துகொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மணிகண்டன், பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணா, கொடைவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் நெடுமாறன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story