அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:17:14+05:30)

தேவதானம்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி ஒன்றியம் தேவதானம்பேட்டை ஊராட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அண்ணமயில் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பெரியாமூர் கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சிகளில் ஒன்றியக்குழு துணை தலைவர் கையபாலன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், ஒன்றிய |கவுன்சிலர்கள் புவனா செந்தில் குமரன், ஞானாம்பாள் பஞ்சமூர்த்தி, டிலைட், கேமல், ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயியினி கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் சாரங்கபாணி, ஒன்றிய அவைத்தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story