பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் நடைபயணம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் நடைபயணம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் நடைபயணம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் அரசு ஊழியர்கள் ஓய்விற்கு பின்னர் உயிர் வாழ ஓய்வூதியம் கேட்டும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், எங்கள் உரிமைகளை பறிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தியும் நடை பயணம் மேற்கொண்டனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த நடை பயணத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மரியதாஸ் தொடங்கி வைத்தார். இதற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆளவந்தார் வாழ்த்துரை வழங்கினார். நடை பயணத்தில் கலந்து கொண்ட பல்வேறு அரசுத்துறைகளின் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையாவிடம் கோரிக்கை மனுவினை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story