ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி: டிடிவி தினகரன் வலியுறுத்தல்


ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
x

ஜெயந்த்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ராணுவ வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானியான மேஜர் ஜெயந்த் உயிரிழந்ததற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், அருணாசலப்பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தேனியை சேர்ந்த ஜெயந்த் என்ற விமானி உயிரிழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

ஜெயந்த்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ராணுவ வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ஜெயந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.


Next Story