இறகு பந்து போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்


இறகு பந்து போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவில் நடந்த இறகு பந்து போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி பவதாரணி, பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடந்த இறகு பந்து போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளார். முதலிடம் பெற்ற மாணவி பவதாரணிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. பின்னர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவியை பாராட்டும் நிகழ்ச்சி குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியை பரமேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியை கலாராணி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.


Next Story