அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு


அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு
x

விருபாட்சிபுரம் அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்ட அளவிலான கையுந்து பந்து மற்றும் கடற்கரை கையுந்து பந்து போட்டிகளில் வேலூர் விருபாட்சிபுரம் அரசு பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான கையுந்து பந்து போட்டியில் எம்.ஐஸ்வர்யா, ஒய்.ஜெயமணி, வி.பவித்ரா, ஒய்.ஸ்ரீமதி, டி.சிந்து, வி.மோனிஷா, எஸ்..சுஜித்ரா, எம்.ரோஷினி, ஏ.அபியா, என்.நிவேகா, வி.மகாசக்தி ஆகியோரும், 19 வயதிற்குட்பட்டோருக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் எம்.ஐஸ்வர்யா, ஒய்.ஸ்ரீமதி என்ற மாணவிகளும், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் எம்.கீர்த்தனா,ஜெ.ஜனனி ஆகியோரும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் ஆர்.விஷால் என்ற மாணவனும் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வி.கவிதா, எம்.முருகன் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியை க.சித்ரா பாராட்டினார். மேலும் உதவி தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரும், மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டினர்.

1 More update

Next Story