கோவில்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கான கலைத்திருவிழா
கோவில்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளி வட்டார வளமைய வளாகத்தில், வட்டார அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை தாங்கினார். தொடக்க கல்வி அதிகாரி சின்னராசு முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அதிகாரி முத்தம்மாள் வரவேற்று பேசினார். நகரசபை தலைவர் கா. கருணாநிதி கலைத்திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் 8 அரசு பள்ளிகளை சேர்ந்த மேல்நிலை மாணவர்கள் பாட்டு, கருவிய இசைத்தல், நடனம், நாடகம், கதை- கவிதை, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்தகொண்டார்கள். நிகழ்ச்சியில் புல்லாங்குழல் இசைத்த கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் ரூபேஸை பாராட்டி நகரசபை தலைவர் ரூ 2 ஆயிரமும், சுரைக்காய்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி ஆயிரம் ரூபாயும் பரிசளித்தனர். வட்டார கல்வி அதிகாரி பத்மாவதி, பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நட்டாத்தி நன்றி கூறினார். இதேபோல கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8 வரை மாணவ- மாணவிகளுக்கான கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன.கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன.