இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

வேலூர் மாவட்டம் தத்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தம்மாள் (வயது 72). கடந்த 2015-ம் ஆண்டு ஆம்பூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அமிர்தம்மாள் கால் மீது அரசு பஸ் ஏறி இறங்கியது. இதனால் மூதாட்டிக்கு காலில் ஊனம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு அமிர்தம்மாள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அவருக்கு ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை.

அதைத்தொடர்ந்து பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஆம்பூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


Related Tags :
Next Story