அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்
x

தலைஞாயிறு ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரவை கூட்டம்

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைஞாயிறு ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரவை நிர்வாகிகள் பக்கிரிசாமி, முத்துரங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நெல் கொள்முதல் நிலையம்

தலைஞாயிறு ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இன்றி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தொடர்ந்து வழங்க வழிவகை செய்திட வேண்டும்.

தலைஞாயிறு ஒன்றியத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கட்சியின் நிர்வாகிகள் மகேந்திரன், வீராச்சாமி, ஜெயராமன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story