நலத்திட்டங்களை பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு உயர்த்த வேண்டும்-பூசாரிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்


நலத்திட்டங்களை பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு உயர்த்த வேண்டும்-பூசாரிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நலத்திட்டங்களை பெற ஆண்டு வருமான உச்சவரம்பை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பூசாரிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி, பிப்.28-

நலத்திட்டங்களை பெற ஆண்டு வருமான உச்சவரம்பை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பூசாரிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மாநாடு

ராமநாதபுரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச்சங்க 14-வது மாவட்ட மாநாடு கடலாடியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு இரணசிங்க பாலா தலைமை தாங்கினார். கோவில் பூசாரிகள் தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஆலோசனைக்குழு தலைவர் மாணிக்கவாசகம், செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் கூரிஅய்யா, செய்தி தொடர்பாளர் சண்முகதுரை, மகளிர் அணி சண்முக சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் சுந்தரம், செயலாளர் சங்கர், துணை தலைவர் முனியசாமி, துணைச் செயலாளர் அய்யன குமார் ஆகியோர் பேசினர். இதில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஓய்வூதிய குழு உறுப்பினரும், கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவருமான வாசு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சிறப்பான முறையில் திராவிட மாடல், ஆன்மிக அரசியல் நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த மாநாட்டில் நன்றி ெதரிவிக்கிறோம். கிராமப்புற கோவில் திருப்பணி நிதி உதவி ரூ.2 லட்சமாக உயர்வு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஒரு கால பூஜை நடைபெறும் 15 ஆயிரம் கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்வு, அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், அன்னை தமிழில் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ளார்.

நலவாரியம்

ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களுக்கான மின் கட்டணத்தை இந்து சமய அறநிலைத்துறை செலுத்தும் என அரசு சார்பில் உறுதி கூறப்பட்டது. அந்த அடிப்படையில் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். கிராம கோவில் பூசாரிகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு வழிவகைகளில் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு தற்போது ரூ.72 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இதனை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும்.

கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் மாதம் ரூ.2000 வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை நடப்பு ஆண்டில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கடலாடி நகர் பொறுப்பாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.


Next Story