அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

அவினாசி

புதிய ஓய்வூதியதிட்டத்தை திரும்ப பெற வேண்டும்.பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், நகர்ப்புற நூலகர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை மற்றும் தொகுப்பு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் பெற்று வரும் ஊரில் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அகவிளைப்படி உயர்வு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சத்திற்கும் மேலான காலி பணி இடங்களை காலமுறை ஊதியம் நடைமுறையில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அவினசி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அவினாசி வட்ட கிளை தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக் கிளை செயலாளர் கமலா, விவசாய அலுவலர் சங்கத்தலைவர் சின்னராசு, சத்து உணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் சுமதி ஆகியோர் விளக்கினர். இதில் திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


-


Related Tags :
Next Story