ஆனைமலையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்-பயணிகள் அவதி


தினத்தந்தி 22 March 2023 12:15 AM IST (Updated: 22 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்சால் பயணிகள் அவதிப்பட்டனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்சால் பயணிகள் அவதிப்பட்டனர்.

பழுதாகி நின்றது

ஆனைமலை பகுதியில் மாசாணி அம்மன் கோவில் மற்றும் ஆழியார் டாப்சிலிப், பரம்பிக்குளம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இப்பகுதிக்கு கோவை மாவட்டம் இன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். ஆனைமலை -பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்குகின்ற அரசு பஸ்கள் அவ்வப்போது பழுதாகி நிற்பதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். நேற்று 23 எண் கொண்ட காந்தி ஆசிரமம் செல்லும் அரசு பஸ் ஆனைமலை பஸ் நிறுத்தத்தில் பழுதாகி நின்றது. அதனால் பயணிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து பயணிகள் மற்றும் நடத்துனர் உதவியுடன் பஸ்சை முன்னோக்கி நகர்த்தினர். இதேபோல் பொள்ளாச்சி -ஆனைமலை வழித்தடத்தில் இயங்குகின்ற பெரும்பாலான அரசு பஸ்கள் மிகவும் பழுதாகி உள்ளது. பழுதான அரசு பஸ்களை முழுமையாக சரி செய்யாமல் வழித்தடத்தில் இயக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வால்பாறை

வால்பாறையிலிருந்து முடீஸ் பகுதிக்கு செல்லும் சாலை வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சாலை மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலையின் இரு பக்கத்திலும் சாலை அமைக்காமல் இருக்கிறது. இதனால் வாகனங்கள் எதிரெதிராக வரும் போது வாகனங்கள் இடம் கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் முடீஸ் பஸ் நிலையத்தில் இருந்து வால்பாறையை நோக்கி வந்த அரசு பஸ் முடீஸ் தொலைபேசி நிலையம் அருகில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் போது சாலையின் பக்கவாட்டில் சாய்ந்தது. அதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்ததோடு கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் டிரைவரின் சாமர்த்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story