மெக்கானிக்கை தாக்கிய பட்டதாரி கைது
வளையப்பட்டியில் மெக்கானிக்கை தாக்கிய பட்டதாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்
மோகனூர் போலீஸ் சரகத்திற்்கு உட்பட்ட வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வளையப்பட்டி இரவு 9 மணி அளவில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக சசி என்கிற சசிக்குமார் (24), ரோகித் (23), அருண் பாண்டியன் ஆகிய 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த வினோத்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வினோத்குமார் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் மோகனூர் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்குப்பதிவு செய்து வளையப்பட்டியை சேர்ந்த ரோகித் பி.எஸ்சி. பட்டதாரி என்பவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.