241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
சுதந்திரதினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 241 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.
சுதந்திரதினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 241 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று 241 கிராம ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கிராமசபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம்-2022-23, 2023-24-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படும். மேலும் இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், 2023-24-ம் ஆண்டு வளர்ச்சி பணிகள் குறித்து இக்கிராமசபையில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கிராமசபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை விவாதித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.