241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மயிலாடுதுறை ஒன்றியம் கடுவங்குடி, நல்லத்துக்குடி, செருதியூர், அகரக்கீரங்குடி, பட்டமங்கலம் கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடந்த ஆண்டு கிராமத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த வரவு செலவு கணக்குகள் பொதுமக்கள் முன்பு வாசிக்கப்பட்டது. பின்னர் இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீன்தயாள் உபாத்யாய கிராமிய கவுசல்ய யோஜனா கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் தொடர்பாக கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மேலும் கிராமப்புறத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், கிராமப்புற சாலைகளை மேம்படுத்த வேண்டும், நூலக கட்டிடம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story