சுதந்திர தினத்தையொட்டி 445 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


சுதந்திர தினத்தையொட்டி 445 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:30 AM IST (Updated: 14 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி 445 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நானை நடைபெறுகிறது.

சிவகங்கை


சுதந்திர தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கிராமசபை கூட்டம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சுதந்திர தினமான நாளை(செவ்வாய்க்கிழமை) அனைத்து 445 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நாளை காலை 11 மணியளவில் உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஜல்ஜீவன் இயக்கம்

கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை மற்றும் பண்ணை சாரா ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்படவுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story