அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி, வருகிற 15-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகம், அயோடின் உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்தல், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. எனவே கிராமசபை கூட்டத்தில் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story