மணப்பாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்


மணப்பாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
x

மணப்பாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது.

செங்கல்பட்டு

கிராமசபை கூட்டம்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி இந்த ஆண்டு கிராமசபை கூட்டங்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 6-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சிகளில் நடத்த ஆணையிடப்பட்டது.அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் மணப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்திற்கான உறுதிமொழி கிராம மக்கள் முன்னிலையில் ஏற்கப்பட்டது.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்

இந்த ஆண்டு ஜல்சக்தி இயக்கத்தின் மூலம் குடிநீருக்கான ஆதாரத்தை நிலைபடுத்துதல் ஒவ்வொருவரும் நீரை பாதுகாத்தல், பயன்பாட்டை குறைத்தல், அனைத்து வீடுகளிலும் மழைநீரை சேகரித்தல், புதிய குடிநீர் ஆதாரத்தை உருவாக்குதல், ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், நீர்நிலைகளை புனரைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்றவற்றிற்கு ஏதுவாக நீர்நிலைகளை கணக்கெடுக்க வேண்டும் மற்றும் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக இ-சேவை வசதி மையங்களை தொடங்க திட்டம் நடைபெறும். கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை மாநில அளவில் கண்காணித்திட நம்ம கிராமசபை எனும் மென்பொருள் உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) செல்வராணி, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் ஆர்.டி.அரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகலைச்செல்வன், ஹரிகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார், துணைத்தலைவர் சண்முகபிரியா மற்றும் ஊராட்சி செயலர் முருகன், அரசு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story