கிராம சபை கூட்டத்தில் பிரச்சினை


கிராம சபை கூட்டத்தில் பிரச்சினை
x

விருதுநகர் அருகே கிராம சபை கூட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் யூனியன் பாவாலி பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் அழகம்மான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு செலவு தொடர்பாக விளக்கம் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆமத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் பாவாலி கிராமத்திற்கு விரைந்தனர். விளக்கம் கேட்ட சக்திவேல் மற்றும் காளிதாஸ் ஆகியோர் இதுபற்றி போலீசாரிடம் முறையிட்டனர். இதனைதொடர்ந்து போலீசார் கேட்க வேண்டிய கேள்விகள் பஞ்சாயத்து தரப்பில் கூறப்படும் விளக்கம் ஆகியவற்றை வீடியோ பதிவு செய்து கொள்ளுமாறும் அதன்பின் இதுகுறித்து மேல் முறையீடு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். அதன்படி வரவு, செலவு கணக்கு தொடர்பான கேள்விகள் மற்றும் விளக்கம் வீடியோ பதிவு செய்யப்பட்ட பின் கூட்டம் முடிவுற்றது.



Next Story