காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2-ந் தேதி கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2-ந் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2-ந் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.