சிறுமலை உள்பட 4 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


சிறுமலை உள்பட 4 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுமலை உள்பட 4 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுமலை உள்பட 4 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுமலை ஊராட்சி பழையூரில், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, துணைத்தலைவர் வெற்றிவேல், சுகாதார ஒருங்கிணைப்பாளர் வீரமணி, ஒன்றிய கவுன்சிலர் கனிராஜ், ஊராட்சி செயலர் முத்துக்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் தோட்டனூத்து ஊராட்சி புளியம்பட்டியில், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் சரவணன், ஒன்றிய அலுவலர் முகமது இஸ்மாயில், ஊராட்சி செயலர் நாகராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், குடிநீர் வாரிய அதிகாரிகள், மின்சாரத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பாலகிருஷ்ணாபுரம்

பாலகிருஷ்ணாபுரம் முனியப்பன் கோவில் வளாகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் பானுப்பிரியா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த், ஊராட்சி செயலர் சுரேஷ் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், மக்கள் நல பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அடியனூத்து ஊராட்சி மொட்டணம்பட்டியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் ஜெயராமன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனபாண்டி, ஊராட்சி செயலர் தாமஸ், வார்டு உறுப்பினர்கள் பாண்டி, சதீஷ்குமார், கவுசல்யா, மகேஸ்வரி, வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story