மதுரையில் மாபெரும் விவசாய கண்காட்சி - சு.வெங்கடேசன் எம்.பி தொடங்கி வைத்தார்
மதுரையில் விவசாய கண்காட்சியை சு.வெங்கடேசன் எம்.பி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 22-ந்தேதி வரை நடக்கிறது.
மதுரை,
மதுரையில் யுனைடெட் அக்ரிடெக் 2022' என்ற தலைப்பில் மாபெரும் விவசாய கண்காட்சி இன்று காலை தொடங்கியது. இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான கருவிகள், நடவு முதல் அறுவடை வரை தேவையான எந்திரங்கள், களை எடுப்பு எந்திரங்கள், கதிர் அறுவடை செய்யும் எந்திரங்கள், டிராக்டர்கள், சோலார், உயர்தர நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பம்புகள், மோட்டார்கள், பாரம்பரிய நெல் மணிகள், விதைகள், செல்போன் மூலம் கேட்வால்வுகளை இயக்கும் நவீன தொழில்நுட்பம், இயற்கை விவசாய முறைகள், மாடித்தோட்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். இந்த கண்காட்சி வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story