மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
கலவை அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை
கலவை
கலவையை அடுத்த அத்தியானம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பானுமதி (வயது 70). இவர் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் உமா அத்தியாயம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். பானுமதி சில நாட்களாக உடல் நலம்பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில் உடல் மீது மண்எணணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் வலிதாங்க முடியாமல் வெளியே ஓடி உள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story