கிராவல் மண் கடத்தியவர் கைது


கிராவல் மண் கடத்தியவர் கைது
x

கிராவல் மண் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 52). இவர் பெரம்பலூர் தண்ணீர் பந்தலைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் பகுதிக்கு சென்றார். இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் லாரியை திருமாந்துறை சுங்கச்சாவடியில் வைத்து பிடித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story