கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்


கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கோவை நாடார் சங்க புதிய நிர்வாகிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சங்க தலைவர் ஆர்.பாஸ்கரன் நாடார் பேசினார்.

கோயம்புத்தூர்


கோவை

கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கோவை நாடார் சங்க புதிய நிர்வாகிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சங்க தலைவர் ஆர்.பாஸ்கரன் நாடார் பேசினார்.

நாடார் சங்க தேர்தல்

கோவை மாவட்ட நாடார் சங்க தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஆர்.பாஸ்கரன் நாடார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. சங்க தலைவராக ஆர்.பாஸ்கரன் நாடார் தேர்வு செய்யப்பட்டார்.

இதைதொடர்ந்து கோவை மாவட்ட நாடார் சங்க தேர்தல் வெற்றி விழா மற்றும் பாராட்டு விழா கோவை டாடாபாத் அருகே உள்ள நாடார் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் பாஸ்கரன் நாடார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விமலராகவன், பொருளாளர் டி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்விக்கு முக்கியத்துவம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சங்க தலைவர் ஆர்.பாஸ்க ரன் நாடாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். இதையடுத்து ஆர்.பாஸ்கரன் நாடார் பேசியதாவது:-

நாடார் சங்க தேர்தலின் போது நம் சமுதாய மக்களுக்கு வழங் கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும் சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சங்கத்தில் மிக குறைந்த அளவே நிதி இருப்பு உள்ளது. ஆனாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அனைத்து விதத்திலும் முயற்சி செய்வேன்.

உதவி செய்யப்படும்

ஏழை, எளியவர்களுக்கு தேவையான உதவி செய்யப்படும். சமுதாயத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை தலைவர்கள் திலகராஜ், ராஜமாணிக்கம், வாசகன், செயலாளர்கள் சிலுவை முத்துகுமார், சபாபதி, விஜய குமார், கிரகலட்சுமி பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் ஜெயா திலகராஜ் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story