நள்ளிரவில் தெரிந்த பச்சைவால் நட்சத்திரம்


நள்ளிரவில் தெரிந்த பச்சைவால் நட்சத்திரம்
x

கொடைக்கானலில் நள்ளிரவில் வானில் பச்சைவால் நட்சத்திரம் தெரிந்தது.

திண்டுக்கல்

சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படும் பச்சை வால் நட்சத்திரம் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி சூரியனைக் கடந்து பூமியை நோக்கி வந்தது. அது நேற்று காலை பூமிக்கு மிக அருகில் தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை எதிர்நோக்கி பல சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கேமராக்களுடன் காத்துக் கிடந்தனர். இதையொட்டி கொடைக்கானல் நகரில் உள்ள அப்சர்வேட்டரி வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் தொலைநோக்கிகள் மூலம் புகைப்படம் எடுக்க தயாராகி இருந்தனர். அடர்ந்த மேகமூட்டம் நிலவியதால் அவர்களால் படம் பிடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் நள்ளிரவு 12.30 மணி முதல் ஒரு சில இடங்களில் வானில் பச்சை வால் நட்சத்திரம் தென்பட்டது. இதனைக் கண்டு ஆர்ப்பரித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதனை கேமராக்களில் படம் பிடித்தனர். இந்த பச்சை வால் நட்சத்திரம் வரும் 4 மாதங்களுக்கு வெவ்வேறு காலநிலைகளில் இரவு நேரங்களில் கண்டு களிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story