4.81 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பசுமை தமிழ்நாடு இயக்கம்


4.81 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பசுமை தமிழ்நாடு இயக்கம்
x

4.81 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பசுமை தமிழ்நாடு இயக்கத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

4.81 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பசுமை தமிழ்நாடு இயக்கத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

பசுமை தமிழ்நாடு இயக்கம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 1.77 கோடி மரக்கன்றுகளை உருவாக்க ரூ.38 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 42 ஆயிரத்து 919 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பசுமை போர்வை இருக்க வேண்டும்.

இந்த இலக்கை எட்ட தமிழகத்தில் மேலும் 13,500 சதுர மீட்டர் பரப்பளவு பசுமைப்போர்வை உருவாக்க வேண்டி உள்ளது. இதற்காக 10 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டுவதற்கு பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மரக்கன்றுகள்

அதன்படி விருதுநகர் ஆர்.ஆர். நகரில் விருதுநகர் மாவட்ட வனத்துறையின் சார்பில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 310 மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டத்தினை மரக்கன்றுகள் நட்டு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

கலெக்டர் மேகநாதரெட்டி, ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் 18 வகையான நாட்டு மரக்கன்றுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நட்டார். மரக்கன்றுகளை பராமரிக்க மழைநீர் சேகரிப்பு குளங்களும், வாய்க்கால்களும் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதில் புலிகள் காப்பகத்துணை இயக்குனர் திலிப் குமார், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், ராம்கோ நிறுவன தலைவர் (உற்பத்தி) ராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பணி நியமன ஆணை

முன்னதாக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story