முதல்-அமைச்சரிடம் வாழ்த்து


முதல்-அமைச்சரிடம் வாழ்த்து
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:47 PM GMT)

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 13-வது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்-2022 போட்டியில் வெற்றி பெற்ற மிஸ்டர் யூனிவர்ஸ் கார்த்திக் ஈஸ்வர், 100 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்ற ராஜேந்திரமணி, 70 கிலோ எடை பிரிவில் 2-ம் இடம் பெற்ற ஹரிபாபு ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன், தமிழ்நாடு பளு தூக்கும் சங்க தலைவர் ராஜா எம்.எல்.ஏ., இந்திய அணியின் பயிற்சியாளர் அரசு ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story