மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கூட்டத்தில், இலவசவீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 28 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 25 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 25 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 17, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 25 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 5 மனுக்களும் என மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டன.


Next Story