புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 13 Aug 2023 7:00 PM GMT (Updated: 13 Aug 2023 7:00 PM GMT)

புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

அடிக்கடி ஏற்படும் மின்தடை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கச்சாத்த நல்லூர் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கிராமத்திற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும்.

ஆனந்த், கச்சாத்தநல்லூர்.

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சோதுகுடி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிவதால் அவற்றின் தொல்லைகளால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த குரங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை கீழே கொட்டி பாழாக்குகின்றன. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

ரேஷன் கடை அமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடைப்பட்டி கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ரேஷன் கடை இல்லாததால் இப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எஸ்.புதூர் கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் பொன்னாங்குடி விலக்கில் இருந்து கல்லல் புரண்டி வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆறுமுகம் சேதுராமன், தென்மாபட்டு.

விபத்து ஏற்படுத்தும் மாடுகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகம், காரைக்குடி.


Next Story