திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்
திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிவனுபாண்டியன் (தலைமையகம்), பழனி (சைபர் கிரைம் பிரிவு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை போலீஸ் சூப்பிரண்டுவிடம் வழங்கினர்.
பெறப்பட்ட மனுக்கள் குறித்து அவர் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் சில மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இந்த முகாமில் நிலப்பிரச்சினை, பணப்பிரச்சினை தொடர்பாக ஏராளமானவர்கள் மனு அளித்திருந்தனர்.
Related Tags :
Next Story