மாநகராட்சி சார்பில் குறைதீர்க்கும் முகாம்
மாநகராட்சி சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
கரூர்
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
முகாமில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுவது, புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிப்பது, சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்வது, பிறப்பு, இறப்பு சான்று வழங்குவது என்பன உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
முகாமில் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பித்த 10 நாட்களில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story