மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் வாரம்தோறும் பொதுமக்களிடம் இருந்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் புகார் மனுக்களை பெற்றுவருகிறார். இதில் நிதி முறைகேடு, பண மோசடி, நில அபகரிப்பு போன்ற மனுக்கள் மீது வாரம்தோறும் சனிக்கிழமை மாவட்ட குற்றப்பிரிவில் முகாம் நடத்தி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். இதில் நில அபகரிப்பில் 10 மனுக்களும், நிதி முறைகேடு சம்பந்தமாக 20 மனுக்களும் பெறப்பட்டன. இது தொடர்பாக புகார்தாரர்களையும் எதிர்தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் 13 மனுக்களுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story