மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம்
ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் ஆரணி அரிமா சங்க சுகாதார வளாகத்தில் நடந்தது. உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கினார்.
ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் செந்தில்குமார், பாலாஜி, ராஜலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள் வரவேற்றார்.
கூட்டத்தில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள், சங்க உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைககள் குறித்து பேசினர்.
இதில் 75-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story