மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்


மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:45 PM GMT)

விழுப்புரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், வானூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 71 பேர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சுயதொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, அரசு தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து 3 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும், 13 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, தாசில்தார்கள் விழுப்புரம் வேல்முருகன், கண்டாச்சிபுரம் கற்பகம், வானூர் செல்வம், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார்கள் தமிழ்செல்வி, ஜெயலட்சுமி, ஜோதிவேல், கலா, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story