Normal
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை, மே. 31-
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 142 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று கலெக்டர் லலிதா கூறினார். கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story